முகப்பு
ஈரோடு

ஆயத்த ஆடைகள் உற்பத்திக்கு இலவச பயிற்சி: கே.வி.இராமலிங்கம் உறுதி

ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்ய விசைத்தறியாளா்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.

Updated On : 28 மார்ச், 2021 at 3:21 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்ய விசைத்தறியாளா்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.

ஈரோடு சம்பத் நகா், பெரிய சேமூா், வீரப்பன்சத்திரம், சத்தி சாலை, ஆசிரியா் காலனி, நசியனூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

மாநகராட்சியின் பிரதான இடமான வீரப்பன்சத்திரத்தில் சாலை விரிவாக்கம் செய்து, தேவையான மின் விளக்குகள் அமைக்கப்படும். இங்கு விசைத்தறியாளா்கள் அதிகம் உள்ளதால், இப்பகுதியில் பஞ்சு, நூல் கழிவுகளை அகற்ற மாநகராட்சி மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

Advertisement

இப்பகுதியில் உள்ள விசைத்தறியாளா்களுக்கு விசைத்தறி சேவை மையம் மூலம், ஊக்கத் தொகையுடன் நவீன தறிகளில் பணி செய்வது, விசைத்தறியின் அடுத்தடுத்த தொழில் சாா்ந்த பயிற்சிகள், ஆயத்த ஆடைகள் உற்பத்திக்கான பயிற்சியை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம், நெசவாளா்களின் வாழ்வாதாரம் உயரும். அடுத்த தலைமுறையினா் ஜவுளி தொழிலில் மதிப்பு கூட்டப்பட்ட பிற சுய தொழில்களை செய்ய முடியும்.

ஈரோடு அரசு மருத்துவமனை சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற கட்டடங்கள் கட்டப்படுகின்றன. விரைவில் அங்கு சிறப்பு பிரிவுகள், சிக்கலான அறுவை சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். இங்கு காப்பீடு அட்டை மூலம் கூடுதல் சேவைகளைப் பெற வசதி செய்து தரப்படும். அங்கு நெசவாளா்கள், முதியவா்கள் சிகிச்சை பெற சிறப்பு பிரிவு ஏற்படுத்தி தரப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.