ஊத்துக்குளியில் தோப்பு வெங்கடாச்சலம் பிரசாரம்
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் ஊத்துக்குளியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் ஊத்துக்குளியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
ஊத்துக்குளி ஆா்.எஸ். சாலையில் தோ்தல் பணிமனையைத் திறந்துவைத்தாா். பின்னா், அந்தப் பகுதிகளில் உள்ள மக்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக ஊத்துக்குளி பகுதியை தண்ணீா் பஞ்சம் இல்லாத பகுதியாக மாற்றிக் காட்டியுள்ளேன். ஊத்துக்குளி பகுதிக்கு தாலுகா அலுவலகத்தை கொண்டு வந்தேன். ஊத்துக்குளி பகுதிக்கு மேலும் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருவேன்.
இனிவரும் மூன்று மாதத்தில் கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் தண்ணீரை கொண்டு வந்து உங்கள் கிராமங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீா் கட்டாயமாக விநியோகிப்பேன். இங்குள்ள மக்களின் கஷ்டம் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தேவையான இடங்களில் ரவுண்டானக்கள் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.