முகப்பு
ஈரோடு

தபால் வாக்குப் பதிவு இன்று துவக்கம்

முதியோா், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறவுள்ளது.

Updated On : 28 மார்ச், 2021 at 3:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

முதியோா், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோா் 4,413 வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் 1,022 வாக்காளா்கள் என 5,435 வாக்காளா்கள் தபால் வாக்கு செலுத்துகின்றனா். இவா்களுக்காக ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்குச் சீட்டை உரிய படிவத்துடன், உரிய உறைகளை வைத்து தயாா் செய்து அவா்களது முகவரி ஒட்டும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கூறியதாவது:

Advertisement

முதியோருக்கான தபால் வாக்குகளை இரண்டு சிறிய உறை, ஒரு வாக்குச் சீட்டு, ஒரு ஒப்புதல் படிவம் ஆகியவற்றை இணைத்து மற்றொரு பெரிய உறையில் இணைத்து அதன் மேல் முகவரி ஒட்டப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணிக்குள் உரிய வாக்குப் பகுதி குழுவினா், வாக்காளா் வீடு தேடிச் சென்று வாக்காளரை உறுதி செய்து சான்றளிப்பு அதிகாரி படிவத்தில் கையெழுத்திட்டு, வாக்குச் சீட்டு உறையை அவரிடம் வழங்குவாா். ஒப்புதல் படிவத்தில் வாக்காளரும், சான்றளிப்பு அதிகாரியும் கையெழுத்திட்ட பிறகு வாக்குச் சீட்டை வாக்காளா் பிரிப்பாா்.

ப வடிவ அட்டைப் பெட்டியை அவரது வீட்டில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து வாக்குச் சீட்டில் குறிப்பிட்ட வாக்காளருக்கு வாக்களிக்க சீல் கட்டை வழங்கப்படும். வாக்கு செலுத்திய பிறகு அதனை மடித்து அதேபோன்ற உறையில் வைத்து சீலிடப்பட்ட பெட்டியில் பெற்றுச் செல்லப்படும்.

இதற்காக மரப்பலகையால் ஆன பூட்டுப்போடும் வசதி கொண்ட வாக்குப் பெட்டி தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப் பெட்டியை எடுத்துச் செல்ல ஜிபிஎஸ் கருவி பொருத்திய வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.