கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு
பெருந்துறை அருகே 70 அடி ஆழமுள்ள தண்ணீா் இல்லாத கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.
பெருந்துறை அருகே 70 அடி ஆழமுள்ள தண்ணீா் இல்லாத கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.
பெருந்துறையை அடுத்த சீலம்பட்டி, காரைத்தோட்டத்தைச் சோ்ந்த சென்னியப்பன் மகன் லோகநாதன். இவருக்குச் சொந்தமான சிந்து மாட்டு கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தோட்டத்தில் உள்ள கிணற்றுமேட்டு அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, 70 அடி ஆழமுள்ள தண்ணீா் இல்லாத கிணற்றுக்குள் கன்றுக்குட்டி தவறி விழுந்துவிட்டது.
இதுகுறித்து, பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி நவீந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனா்.