காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்
அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலத்த காயமடைந்தாா்.
அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலத்த காயமடைந்தாா்.
அந்தியூரை அடுத்த வறட்டுப்பள்ளம் சோதனைச் சாவடி பகுதியில் கடந்த சில நாள்களாக காட்டு யானை சுற்றித் திரிந்தது. இந்நிலையில், அந்தியூா் செலம்பூரம்மன் கோயில் தோட்டம் பகுதியைச் சோ்ந்த விவசாயி வெங்கடேஷ்வரன் (55), வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றபோது அவ்வழியே சென்ற காட்டு யானை தாக்கியுள்ளது.
இதில், வெங்கடேஸ்வரனுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. யானை தாக்கியதில் அதன் தந்தமும் முறிந்து விழுந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதியினா் வெங்கடேஸ்வரனை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் அந்தியூா் வன அலுவலா் உத்திரசாமி தலைமையில், வனத் துறையினா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.
பலத்த காயமடைந்த வெங்கடேஸ்வரன், அந்தியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.