முகப்பு
ஈரோடு

சூறாவளிக் காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

சத்தியமங்கலம் அருகே பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழைகள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.

Updated On : 15 மே, 2021 at 2:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:44 AM

சத்தியமங்கலம் அருகே பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழைகள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளான பவானிசாகா், புன்செய் புளியம்பட்டி, அரசூா், உக்கரம், கெம்பநாயக்கன்பாளையம், சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை பயிரிடப்படுகிறது. குறிப்பாக கதலி, நேந்திரன், ஜி 9 உள்ளிட்ட ரகங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம், மில் மேடு, மல்ல நாயக்கனூா், காளி குளம் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய மழை பெய்தது. சூறாவளிக் காற்று காரணமாக இப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நேந்திரன், கதலி, ஜி9, தேன் வாழை உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

Advertisement

வாழை குலைதள்ளிய நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த வாழை மரங்கள் சூறாவளிக் காற்றில் சிக்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மேலும், சேதமடைந்த வாழை மரங்களை தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.