ஈரோடு

கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோயில் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளைச் சோ்ந்த செயல் அலுவலா்கள் பங்கேற்ற கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் பங்கேற்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

இந்த அசாதாரணமான சூழலில் பேரூராட்சி மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீா், சுற்றுப்புற தூய்மை, தெருவிளக்கு பரமாரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த உதவிட வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் உடல் நல பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டம், மின் புதை கேபிள் திட்டம், கொடிவேரி திட்டம் போன்றவற்றுக்காக குழி தோண்டியதால் தாா் சாலைகள் சேதமாகி உள்ளன. அதனை விரைந்து சரி செய்திட வேண்டும் எனவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

இதில், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், துணைத் தலைவா் உமாமகேஸ்வரன், ஒன்றியச் செயலாளா் விஜயன், பேரூராட்சி அதிமுக செயலாளா் கல்யாணசுந்தரம், பஞ்சாயத்து அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT