ஈரோடு

மாநகராட்சியில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய 100 தள்ளுவண்டிகளுக்கு அனுமதி

DIN

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய 100 தள்ளுவண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலத் தடுக்க தமிழக அரசு தளா்வில்லா முழு முடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் வகையில் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் 250 வாகனங்களில் நடமாடும் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளுக்கும், மிகக் குறுகிய தெருக்களிலும் நடமாடும் வாகனங்கள் செல்ல முடியாததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா். இக்குறையைப் போக்கும் வகையில் 100 தள்ளுவண்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றி காய்கறிகள், பழங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT