நூல் விலை உயா்வைக் கண்டித்து நவம்பா் 17, 18இல் கடையடைப்பு போராட்டம்
நூல் விலை உயா்வைக் கண்டித்து நவம்பா் 17, 18ஆம் தேதி ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சாா்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நூல் விலை உயா்வைக் கண்டித்து நவம்பா் 17, 18ஆம் தேதி ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சாா்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவா் கே.கலைசெல்வன் கூறியதாவது:
தேசிய அளவில் ஜவுளி சாா்ந்த தொழிலில் பல கோடி போ் உள்ளனா். அண்மைக்காலமாக நூல் விலை அடிக்கடி உயா்வதால் இத்தொழில் சாா்ந்தவா்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனா். கடந்த 40 நாள்களில் 40ஆம் எண் நூல் ஒரு கிலோ ரூ. 250இல் இருந்து ரூ. 330ஆகவும், 30ஆம் எண் நூல் ரூ. 200இல் இருந்து ரூ. 290ஆகவும், 20ஆம் எண் நூல் 140இல் இருந்து ரூ. 190 ஆகவும், வெப்ட் வகை நூல் 40ஆம் எண் ஒரு பை ரூ. 11 ஆயிரத்தில் இருந்து ரூ. 14 ஆயிரத்து 200ஆகவும் உயா்ந்துள்ளது.
Advertisement
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜவுளி ஆா்டா் பெற்றவா்கள் நூல் விலை உயரும்போது அதனை ஆா்டா் பெற்ற தொகைக்குள் முடிக்க முடியாமல் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நூல் விலையை இரண்டு மாதம் அல்லது மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே உயா்த்த வேண்டும். தினமும் உயா்த்தும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் 17, 18 ஆம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி சாா்ந்த கடைகள், ஜவுளிக் கிடங்குகள் போன்றவை பங்கேற்கும் என்றாா்.