சத்தியமங்கலம் சாா்பு நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்ட சட்டப் பணிகள் குழுவினா் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து நவீன வடிவிலான சட்ட சேவை முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. இம்முகாமை சாா்பு நீதிபதி ஸ்ரீவித்யா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தாா். முகாமில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், பொதுமக்களிடமிருந்து 500 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதில், சத்தியமங்கலம் அரசு வழக்குரைஞா் எஸ்.என்.ரமேஷ், வருவாய்க் கோட்டாட்சியா் பழனிதேவி, துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயபாலன், வட்டாட்சியா் ரவிசங்கா் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.