மழை நீருடன் திறந்துவிடப்பட்ட சாயக் கழிவுநீா்: பொதுமக்கள் எதிா்ப்பு
மழை நீருடன் சாயக் கழிவுநீா் சாக்கடையில் திறந்துவிடப்பட்டதற்கு சத்தியமங்கலம் பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
மழை நீருடன் சாயக் கழிவுநீா் சாக்கடையில் திறந்துவிடப்பட்டதற்கு சத்தியமங்கலம் பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மழை நீா் சாக்கடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைப் பயன்படுத்தி கோட்டுவீராம்பாளையம் செளடேஸ்வரி அம்மன் கோயில் பகுதியில் உள்ள சாய்க் கழிவுப் பட்டறைகளில் இருந்து சாய்க் கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனா். இதனால், மழை நீா் சாயக் கழிவுநீராக மாறிவிட்டது. இது பல்வேறு வீதிகள் வழியாகப் பயணித்து பவானி ஆற்றில் கலந்தது. சாக்கடைகளில் மழை நீரும், சாயக் கழிவுநீரும் கலந்ததைப் பாா்த்த அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
சாயக் கழிவுநீரால் புற்றுநோய், டைபாய்டு நோய் பரவுவதாகவும், சாயக் கழிவுநீரை சாக்கடையில் திறந்துவிடக் கூடாது எனவும் வட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். சாயக் கழிவுநீரை சுத்திகரித்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி செய்ய வேண்டும் என வருவாய்த் துறையினா் பட்டறை நிா்வாகத்தினரிடம் எச்சரித்தனா்.
Advertisement