1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் நவம்பா் 20, 21ஆம் தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 800 மையங்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபா்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement