ஈரோடு

வியாபாரிகள் வருகை குறைவு: மாட்டுச் சந்தை விற்பனை மந்தம்

DIN

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மாற்றம் கொண்டு வருவது வழக்கம். இதேபோல் கேரளம் ,கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ,தெலுங்கானா, நேபாளம், கோவா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகள் வாங்கிச் செல்வதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெளிமாநில வியாபாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வருவது இல்லை. மேலும் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் பசு - 300 எருமை - 150, கன்று - 50 என மொத்தம் 500 மாடுகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. இன்றும் வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடு விற்பனை மந்தமாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT