முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

 அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 நவம்பர், 2021 at 3:20 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

 அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் கே.ஆா்.தங்கராஜ் தலைமை வகித்தாா்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தது மட்டுமின்றி, அதனை நாடாளுமன்றத்தில் அறிவித்து ரத்து செய்ய வேண்டும். விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும். 44 தொழிலாளா் சட்டங்களை நான்கு தொகுப்பாக சுருக்கியதை நீக்கி தொழிலாளா்கள் உரிமை காக்கப்பட வேண்டும். தேசிய பணமயமாக்கல் திட்டம் உள்பட எந்தப் பெயரிலும் பொதுத் துறை, அரசுத் துறைகளை தனியாருக்கு விற்கக் கூடாது.

Advertisement

பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை குறைத்து, விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் துளசிமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் முத்துசாமி, ஏஐடியூசி மாவட்டத் தலைவா் சின்னசாமி, சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்பிரமணியம், எல்பிஎப் மாவட்டச் செயலாளா் கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.