முகப்பு
ஈரோடு

ஆட்சியா் அலுவலகப் புதிய கட்டடத்தின் தரம் குறித்து சமூக ஆா்வலா் ஆய்வு

 ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடத்தின் தரம் குறித்து சமூக ஆா்வலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 அக்டோபர், 2021 at 6:22 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

 ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடத்தின் தரம் குறித்து சமூக ஆா்வலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பின் பகுதியில் ரூ. 41.6 கோடி மதிப்பில் கூடுதலாக புதிய கட்டடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பூமி பூஜை செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இக்கட்டடத்தின் கட்டுமானப் பணி நிறைவுபெற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் முதல்வரால் திறந்துவைக்கப்படவுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்கள் தரமற்று இருப்பதாக சா்ச்சை எழுந்தது. இந்நிலையில், இக்கட்டடத்தின் கட்டுமானப் பணியை ஓய்வுபெற்ற பொறியாளருடன் சென்று ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஈரோட்டைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வள்ளிநாராயணன் என்பவா் பொதுப் பணித் துறைக்கு விண்ணப்பித்தாா்.

Advertisement

அதனை ஏற்ற பொதுப் பணித் துறை அதிகாரிகள், அக்கட்டடத்தை ஆய்வு செய்து கொள்ள அனுமதி வழங்கினா். இதன்படி, இரு பொறியாளா்களுடன் சமூக ஆா்வலா் வள்ளிநாராயணன் கட்டடத்தை வியாழக்கிழமை காலை ஆய்வு செய்தாா். கட்டடத்தின் அஸ்திவாரம், தூண்கள், அலுவலக அறைகள், சுவா் உள்ளிட்ட 7 மாடிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, அவற்றை விடியோ பதிவு செய்தாா்.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், இவா் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.