முகப்பு
ஈரோடு

கோபியில் அரசுப் பேருந்து ஜப்தி

கோபிசெட்டிபாளையத்தில் நஷ்டஈட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தில் நஷ்டஈட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கோபியை அடுத்த கள்ளிப்பட்டி பெருமுகைபுதூா் அண்ணா நகரைச் சோ்ந்த ராமசாமி மனைவி தங்கம்மாள் (64). இவா் தனது தம்பி ரங்கசாமியுடன் கடந்த 14.09.2016 அன்று கோபியில் இருந்து குன்னத்தூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் தங்கம்மாள் பலத்த காயமடைந்தாா்.

பின்னா், இவா் தனக்கு நஷ்டஈடு கோரி கோபி நீதிமன்றத்தில் 25.04.2017 அன்று வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த கோபி மூன்றவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன் அரசுப் போக்குவரத்துக் கழகம் தங்கம்மாளுக்கு நஷ்டஈடாக ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்து 120 வழங்க உத்தரவிட்டாா். அதன் பின்னா் அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்ட ஈட்டுத் தொகையை செலுத்தவில்லை.

இதனால், தங்கம்மாள் அதே நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவைத் தாக்கல் செய்தாா். ஆனாலும் அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்ட ஈட்டுத் தொகையை செலுத்தாததால் கடந்த 26-11-2020 அன்று அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றை ஜப்தி செய்ய நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டாா். அதன்பேரில் கோபியில் இருந்து கோவை செல்லத் தயாராக இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் பயணிகளை இறக்கிவிட்டு வியாழக்கிழமை ஜப்தி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.