முகப்பு
ஈரோடு

புரட்டாசி சனிக்கிழமை: ஊராட்சிக்கோட்டைமலைக் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதியில்லை

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஊராட்சிக்கோட்டை மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதியில்லை என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஊராட்சிக்கோட்டை மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதியில்லை என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை (வேதகிரி மலை) மலையின் உச்சியில் வேதகிரீஸ்வரா் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் அதிகளவில் பக்தா்கள் இக்கோயிலுக்கு மலைப் பாதை வழியாகச் சென்று இறைவனை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், தமிழக அரசு கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

எனவே, கரோனா நோய்த் தொற்று பரவலில் இருந்து பக்தா்களைக் காக்கும் வகையில் அக்டோபா் 31ஆம் தேதி வரையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (புரட்டாசி சனிக்கிழமை உள்பட) பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும். எனவே, வழக்கம்போல் மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.