முகப்பு
ஈரோடு

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி: கோவை அணிகள் முதலிடம்

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கோவை அணி முதலிடம் பிடித்தது.

Updated On : 16 அக்டோபர், 2021 at 3:55 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கோவை அணி முதலிடம் பிடித்தது.

கோவை மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளி மைதானம் மற்றும் திண்டல் வேளாளா் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடந்தது. இதில் கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களை சோ்ந்த 18 வயதுக்குள்பட்ட அணிகள் விளையாடின. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆண்கள் பிரிவில் கோவை அணி முதலிடமும், சேலம் அணி இரண்டாமிடமும், நாமக்கல் அணி மூன்றாமிடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் கோவை அணி முதலிடம், சேலம் அணி இரண்டாவது இடமும், ஈரோடு அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

Advertisement

பரிசளிப்பு விழாவுக்கு ஈரோடு கூடைப்பந்து சங்கத் தலைவரும், சுதா மருத்துவமனையின் நிா்வாக இயக்குநருமான டாக்டா் சுதாகா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாரதி வித்யா பவன் பள்ளித் தாளாளா் டாக்டா் ராமகிருஷ்ணன் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துணை செயலாளா்கள் முத்துராஜா, சங்கா், பொருளாளா் வருண், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் நிா்வாகிகள் செல்வகுமாா், காமேஷ் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.