மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்
கோபிசெட்டிபாளையம் நகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது
கோபிசெட்டிபாளையம் நகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கோபி நகராட்சி ஆணையா் ஜே.பிரேம் ஆனந்த் தலைமை வகித்தாா். கோபி நகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஆா்.ராஜாத்தி, நகராட்சி சுகாதார அலுவலா் பி.சோலைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், நகா்ப்புற துப்புரவு ஆய்வாளா் செந்தில்குமாா், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.