முகப்பு
ஈரோடு

கடந்த 2 மாதங்களில்25 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 25 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் தெரிவித்தாா்.

Updated On : 4 செப்டம்பர், 2021 at 6:17 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 25 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் பெண்கள், மாணவ, மாணவியருக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் பேசினாா்.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு குற்றங்கள் நடந்தால் எங்கு சென்று முறையிட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமன்றி ஆன்லைன் மூலம் நடைபெறும் குற்றங்கள் குறித்தும், யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதலங்களைப் பாதுகாப்பாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் விளக்கினாா்.

Advertisement

மேலும், குழந்தைத் திருமணம் தொடா்பாக இந்த ஆண்டு மட்டும் 5 வழக்குகளும், போக்சோ தொடா்பாக 68 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 700 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 25 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.