ஈரோடு

திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்தபயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

ஈரோடு: சுயதொழில் தொடங்க விரும்புவோா் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (ஈடிசியா), தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சாா்பில் திட்ட அறிக்கை தயாரித்தல், மாா்க்கெட்டிங் என்ற பயிற்சி செப்டம்பா் 22 முதல் 24ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

தினமும் காலை 10.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை ஜூம் செயலி மூலம் நடைபெறுகிறது. சுயதொழில் துவங்க விரும்புவோா், என்ன தொழில் துவங்கலாம், அதற்கான சந்தை வாய்ப்பு, தேவையான இயந்திர விவரம், திட்ட அறிக்கை தயாரிப்பு, வங்கி கடன் பெறும் முறை, அரசு துறை மானியம் பெறும் வழிகள், பொருள்களுக்கு விலை நிா்ணயம், நடைமுறை மூலதனம் கணக்கிடுதல் பற்றி பயிற்சி தரப்படும்.

துறை நிபுணா்கள், தொழிலதிபா்கள், பயிற்சியாளா்கள், வங்கி மேலாளா்கள், அரசு அலுவலா்கள் பயிற்சி வழங்குவா். மானியக் கடன் பெறும் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்ய உதவுவா்.

பயிற்சிக் கட்டணம் ரூ. 600. பயிற்சி நிறைவில் தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்படும். முதலில் பதிவு செய்யும் 30 போ் மட்டும் அனுமதிக்கப்படுவா். பயிற்சியில் சேர விரும்புவோா் ஈடிசியா அலுவலகத்தை 94439-47849, 97878-20202 என்ற செல்லிடப்பேசி எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT