முகப்பு
ஈரோடு

செயற்கை நகை தயாரித்தல் இலவச பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கனரா வங்கி பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி ஏப்ரல் 25 முதல் மே 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

Updated On : 15 ஏப்ரல், 2022 at 2:22 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:28 PM

கனரா வங்கி பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி ஏப்ரல் 25 முதல் மே 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு கொல்லம்பாளையம் பைபாஸ் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி, இரண்டாம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு ஏப்ரல் 25 முதல் மே 10ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு பெண்களுக்கான செயற்கை நகை தயாரித்தல் குறித்த இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.

Advertisement

பயிற்சிக்கு கட்டணம் இல்லை. மதிய உணவு, சீருடை ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். கிராமப் பகுதியினா், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்வோா், அவரது குடும்பத்தாா், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 87783-23213, 72006-50604 என்ற கைப்பேசி எண், 0424-2400338 தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.