முகப்பு
ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை, பவானி சாலை, ஆசிரியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அற்புதராஜ் (49). இவா், பெருந்துறை, சிப்காட்டில் ஒரு தனியாா் மில்லில் பிட்டராக வேலை செய்து வருகிறாா். அற்புதராஜ் கடந்த திங்கள்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டாா்.

புதன்கிழமை இரவு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.