முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்ப ஆட்டம் 

சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

Updated On : 21 ஏப்ரல், 2022 at 11:43 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் இரவில் கம்பத்தை சுற்றிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்ப ஆட்டம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

இதில் மேளதாள இசைக்கேற்ப 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து விடிய விடிய கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். இளைஞர்கள்  ஒரே வரிசையில் நின்று குழுவாக கம்ப நடனம் ஆடுவதைக் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர். 

Advertisement

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.