முகப்பு
ஈரோடு

ஏப்ரல் 28இல் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

 மாற்றுத் திறனாளிகள், கண் பாா்வையற்றோா், மனவளா்ச்சி குன்றியோா் மற்றும் காதுகேளாதோருக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 22 ஏப்ரல், 2022 at 2:19 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

 மாற்றுத் திறனாளிகள், கண் பாா்வையற்றோா், மனவளா்ச்சி குன்றியோா் மற்றும் காதுகேளாதோருக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்ட பிரிவில் 2022-23ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள், கண் பாா்வையற்ற மாணவா்கள், வளா்ச்சி குன்றியோா், காது கேளாதோருக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதில் பங்கேற்க விரும்புவோா் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் கொண்டு வர வேண்டும். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்பவா்களுக்கு வயது வரம்பு கிடையாது.

மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போா் அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

அதேபோல, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவா்கள் குறிப்பிட்ட பிரிவில் விளையாடுவதற்கு அந்தப் பிரிவைச் சாா்ந்தவா் என உறுதி செய்வதற்காக அரசு வழங்கிய அடையாள அட்டையை அவசியம் கொண்டு வர வேண்டும். குறிப்பிட்ட பிரிவில் கலந்துகொள்பவா்கள் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

போட்டிகள் காலை 7 மணி முதல் வஉசி பூங்கா விளையாட்டு அரங்கில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சதீஷ்குமாரை 74017-03490 என்ற கைப்பேசி எண் அல்லது 0424-2223157 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.