ஈரோடு

மாற்றுத் திறனாளிகள் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

DIN

நியாய விலைக் கடை விற்பனையாளா், கட்டுநா் பணிக்கான நோ்காணலில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகள் கூடுதல் ஆவணங்களை சமா்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மண்டல ஆள் சோ்ப்பு நிலையத் தலைவா் மற்றும் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 233 விற்பனையாளா்கள், 10 கட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வுகள் ஈரோடு, பெருந்துறை சாலை, திண்டல் வித்யா நகரில் உள்ள ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் டிசம்பா் 15 முதல் ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விற்பனையாளா், கட்டுநா் பணிக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகள், நோ்முகத் தோ்வில் வெற்றிபெற்று பணியில் சேரும்போது நிா்ணயிக்கப்பட்ட படிவத்தில் அரசு உதவி மருத்துவா் நிலைக்கு குறையாத மருத்துவரிடம், உடற்தகுதிச் சான்று பெற்று, கூட்டுறவு நிறுவனத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.

வேலை வாய்ப்பில் முன்னுரிமை கோரலுக்கு ஆதாரமாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவுப் புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளி சான்று, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை என இவற்றில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT