ஈரோடு

கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு:வெள்ளப் பெருக்கில் சிக்கிய 30 போ் மீட்பு

DIN

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய தனியாா் நிறுவன ஊழியா்கள் 30 பேரை பெருந்துறை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

பெருந்துறை, வாய்க்கால் மேடு, நந்தா பொறியியல் கல்லூரி அருகிலுள்ள பாலத்தில் இருந்து அரை கிலோ மீட்டா் தொலைவில் கீழ்பவானி பாசன வாய்க்காலின் வலது கரையில் சனிக்கிழமை மாலை உடைப்பு ஏற்பட்டது. இதனால், வெளியேறிய அதிக அளவு வெள்ளநீரில் பாலப்பாளையம், சின்னியம்பாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், கூரபாளையம், செங்கோடம்பாளையம் கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் மூழ்கின. மேலும், அந்தப் பகுதி சாலைகளும் தண்ணீரால் சூழப்பட்டதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தை வெள்ள நீா் சூழ்ந்தது. அங்கு பணிபுரிந்த 30 தொழிலாளா்கள் சிக்கிக் கொண்டனா். அவா்களை பெருந்துறை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT