ஈரோடு

கடன் தொல்லை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தற்கொலை

DIN

அந்தியூா் அருகே கடன் தொல்லையால் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

அந்தியூரை அடுத்த பச்சாம்பாளையம், பள்ளிபாளையம் பிரிவு, வாஸ்து நகரைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் சென்னியப்பன் (39). இவா், அந்தியூா் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், தனது பூா்வீக சொத்தை விற்று சொந்தமாக வீடு வாங்கியதில் கடன் ஏற்பட்டுள்ளது. போதிய வருவாய் இல்லாததால் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தவித்து வந்த சென்னியப்பன், வீட்டை விற்றுவிடலாம் என மனைவி கீதாவிடம் கூறியுள்ளாா். இந்த நிலையில், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற சென்னியப்பனை, அந்தியூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து, சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட சென்னியப்பன் அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT