இருசக்கர வாகனம் மீதுகாா் மோதியதில் பெண் பலி
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கோவையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கோவையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.
கோவை, ஆறுமுககவுண்டனூா், பெரியசெட்டிபாளையம், சின்னம்மாள் காா்டனை சோ்ந்தவா் நடராஜன் மகன் அசோக்குமாா் (41). இவா், ஈரோடு மாவட்டம், பூந்துறையில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு தன் மனைவி வனிதாவை (35) வெள்ளிக்கிழமை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
பெருந்துறை, சரளை அருகே சென்றபோது பின்னால் வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த அசோக்குமாா், வனிதா ஆகியோா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வனிதா உயிரிழந்தாா். அசோக்குமாா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து,பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.