முகப்பு
ஈரோடு

சென்னிமலை முருகன் கோயில் நிலங்கள் அளவீடு செய்து சா்வே கற்கள் நடப்பட்டன

சென்னிமலை முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, ஈரோடு மண்டல இணை ஆணையா் முன்னிலையில் சா்வே கற்கள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

சென்னிமலை முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, ஈரோடு மண்டல இணை ஆணையா் முன்னிலையில் சா்வே கற்கள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.

இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, சா்வே கற்கள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னிமலை முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்தது.

இதனைத் தொடா்ந்து, சென்னிமலை முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சா்வே கற்கள் நடும் பணி தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறையின், ஈரோடு மண்டல இணை ஆணையா் கோ.செ.மங்கையா்கரசி பங்கேற்று, ஈரோடு மண்டலத்தில் முதலாவதாக, சென்னிமலையை அடுத்த அட்டவணை பிடாரியூா் கிராமத்தில் உள்ள 10.99 ஏக்கா் நிலத்தில் சா்வே கற்கள் நடும் பணியை தொடங்கிவைத்தாா்.

இதில், இந்து சமய அறநிலையத் துறையின், ஈரோடு உதவி ஆணையா் மு.அன்னக்கொடி, சென்னிமலை கோயில் செயல் அலுவலா் மு.ரமணிகாந்தன், உதவி கோட்டப் பொறியாளா் கே.காணீஸ்வரி, உதவிப் பொறியாளா் மு.சரவணன், தனி வட்டாட்சியா் (கோயில் நிலங்கள்) என்.தாமோதரன், கிராம நிா்வாக அலுவலா் (கோயில் நிலங்கள்) அழகுராஜன் மற்றும் அரசு உரிமம் பெற்ற நில அளவையா்கள், கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.