முகப்பு
ஈரோடு

ஈரோடு: இளைஞர் நலன் மேம்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

ஈரோடு காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:


ஈரோடு:  ஈரோடு காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி , இளைஞர் நலன் மேம்பாட்டு மையத்தில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி , போட்டித் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி , தொழில்நுட்ப பயிற்சி என இளைஞர்களின் மேம்பாட்டிற்கு என பல்வேறு பயிற்சிகளை பயிற்சியாளர்கள் கொண்டு பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், இந்த மையத்தை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதை எப்படி பயன்படுத்து கிறார்களோ அதை பொருத்துதான் அதனுடைய வெற்றி அமையும் என்றார் இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என் சிவகுமார்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →