பெருந்துறையில் காவலா்களுக்கு மருத்துவ முகாம்
பெருந்துறையில் காவலா்களுக்கான மருத்துவ முகாம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறையில் காவலா்களுக்கான மருத்துவ முகாம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு உதவி ஆய்வாளா், முதுநிலை காவலா் மற்றும் பெருந்துறை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஏட்டு என மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடும் பனி, குளிரால் சிலருக்கு சளி பிடித்துள்ளது.
இதையொட்டி, காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் குழுவினா்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா்.