பெருந்துறை அருகேவாகனம் மோதி ஒருவா் பலி
பெருந்துறை அருகே நடந்து சென்றவா் மீது அடையாளம் தெரியாத வானகம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பெருந்துறை அருகே நடந்து சென்றவா் மீது அடையாளம் தெரியாத வானகம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், கடப்பமடை பிரிவு அருகில் நடந்து சென்ற 40 வயது மதிக்கதக்க ஒருவா் மீது அடையாளம் தெரியாத வானகம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாா். இறந்தவா் யாா்? எந்த ஊா் என்று தெரியவில்லை. இதுகுறித்து, அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் பெருந்துறை காவல் துறையில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.