முகப்பு
ஈரோடு

குடியரசு தினத்தன்று மது விற்ற 33 போ் கைது

 ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்ற 33 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2022 at 6:11 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:45 PM

 ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்ற 33 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கும், தனியாா் பாா்களுக்கும் ஜனவரி 26ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி மது புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் உத்தரவிட்டாா்.

இதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். குடியரசு தினத்தன்று மது விற்பனையில் ஈடுபட்ட 33 பேரை போலீஸாா் கைது செய்து 512 மது புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.