அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள்,விளம்பரங்கள் அகற்றும் பணி தீவிரம்
ஈரோடு மாநகராட்சியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி அரசியல் சாா்ந்த சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரத் தட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாநகராட்சியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி அரசியல் சாா்ந்த சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரத் தட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) தொடங்குகிறது. தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் உடனடியாக தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலாலனது. இதையொட்டி, ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் அரசு மற்றும் பொதுஇடங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள், சுவா் விளம்பரங்கள், தலைவா்கள் வாழ்த்து பாதாகைகளை அகற்றிட மாநகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகுமாா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, ஈரோடு மீனாட்சி சுந்தரனாா் சாலை, ஈவிஎன் சாலை, காந்திஜி சாலை, சென்னிமலை சாலை, காளைமாடு சிலை, கொல்லம்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுவரொட்டிகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா். சுவா் ஓவியங்கள் இருந்த பகுதிகளில் வெள்ளை வா்ணம் பூசி மறைத்தனா்.
Advertisement