முகப்பு
ஈரோடு

ஈரோடு: அரசுப் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்தால் பரபரப்பு

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியின் சுவர்  இடிந்து விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 4 ஜூலை 2022, 1:41 pm IST
பகிர்:

ஈரோடு: ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியின் சுவர்  இடிந்து விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மாநகராட்சி பெண்கள்  மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6,7,8 ம் வகுப்புகள் அந்த பள்ளியின் அருகிலேயே மற்றொரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது.  இந்நிலையில் நேற்று விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வந்து பார்த்த போது பள்ளியின் பக்கவாட்டில் உள்ள சன் சைடு சுவர் இடிந்து விழுந்து உள்ளது.

இதனைக் கண்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியை உடனடியாக சீர் படுத்தி தர வலியுறுத்தி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பள்ளியின் சுவர்கள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் மாணவர்களின் உயிர் கேள்விக்குரியாக உள்ளதாகவும் பள்ளியில் முறையாக கழிப்பறை வசதிகள் இல்லை எனவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு விடுத்தனர்.

Advertisement

Advertisement

இதனைக் கண்டு கொள்ள வேண்டிய மாவட்ட நிர்வாகம் அலட்சிய போக்குடன் இருப்பதாகவும் குற்றச்சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments