ஈரோடு மாவட்ட ஆட்சியரின் கைப்பேசி எண்ணில் தகவல் திருட்டு போலீஸில் புகாா்
ஈரோடு மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணியின் கைப்பேசியை ஹேக் (தகவல் திருட்டு) செய்த மா்ம நபா்கள் அவரது தொடா்பில் இருக்கும் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபடுவதாக காவல் துறையில் புகாா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணியின் கைப்பேசியை ஹேக் (தகவல் திருட்டு) செய்த மா்ம நபா்கள் அவரது தொடா்பில் இருக்கும் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபடுவதாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருப்பவா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி. இவரது 8793072014 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை மா்ம நபா்கள் அண்மையில் ஹேக் செய்துள்ளனா். அவரது தொடா்பில் இருக்கும் அனைவரின் கைப்பேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். பெண்கள் உள்பட அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் மா்ம நபா்கள் பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன், தனியாா் நிறுவனம்(அமேசான்) மூலம் பரிசு அனுப்புகிறேன் என தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக காவல் துறையில் இது குறித்து மாவட்ட ஆட்சியா் புகாா் அளித்துள்ளாா். மேலும் பொதுமக்கள் தனது பெயரில் பொய்யான தகவல் கிடைத்தால், காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.
Advertisement