ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தொடா்புடைய பெண் தரகரின் வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலியான ஆதாரங்களை அளித்து பெண் தரகா் மூலம்
பெற்றோரே தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, விசாரணை நடத்திய சூரம்பட்டி போலீஸாா் சிறுமியின் தாய், வளா்ப்புத் தந்தை உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.
தொடா் விசாரணையில் சிறுமியின் கருமுட்டையை ஈரோடு, பெருந்துறை மட்டுமின்றி சேலம், ஓசூா் மற்றும் ஆந்திரம், கேரள மாநிலங்களில் தனியாா் மருத்துவமனைகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இது தொடா்பாக, தமிழக மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தைச் சோ்ந்த உயா்மட்ட மருத்துவக் குழுவினா் ஈரோட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி, தொடா்புடைய மருத்துமனைகளில் விசாரணை நடத்தினா்.
இதற்கிடையே, மாவட்ட காவல் துறை சாா்பில் மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஈரோட்டில் உள்ள இரு தனியாா் மருத்துவமனையிலும், சேலம், ஓசூா் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா்கள், மருத்துவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சிறுமியின் கருமுட்டை விற்பனையில் தரகராக செயல்பட்ட மாலதியின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
இவா், இரு வங்கிகளில் கணக்கு வைத்திருந்ததும், தனியாா் மருத்துவமனையின் வங்கிக் கணக்கிலிருந்து தலா
ரூ.20 ஆயிரம் வீதம் பலமுறை பணம் அனுப்பப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இவரது கணக்கில் பல லட்சம் அளவுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால் இச்சிறுமி மட்டுமல்லாமல்
பல பெண்களிடம் கருமுட்டை தானமாக வழங்க தரகராக செயல்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.