முகப்பு
ஈரோடு

மாா்ச் 9இல் ஏற்றுமதி தொழில் பயிற்சி

ஏற்றுமதி தொழில் முனைவோருக்கான பயிற்சி கோபியில் மாா்ச் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது

Updated On : 4 மார்ச், 2022 at 2:35 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

ஏற்றுமதி தொழில் முனைவோருக்கான பயிற்சி கோபியில் மாா்ச் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

விக்டரி தொழில் முனைவோா் பயிற்சி முகாம் மற்றும் அறிவியல் வேளாண்மை மையம்(மைராடா) ஆகியவை இணைந்து மாா்ச் 9, 10 ஆகிய தேதிகளில் பயிற்சியை நடத்துகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோபி, பெருமாள் நகரில் உள்ள மைராடா கூட்ட அரங்கில் இப்பயிற்சி நடைபெறும்.

இதில், 18 வயது முதல் 70 வயது வரையிலான ஆண், பெண் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் நபருக்கு ரூ. 3,500. இப்பயிற்சியில் 35 போ் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதால் முதலில் வருபவா்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே முன்பதிவு செய்யப்படும்.

Advertisement

பயிற்சியில் பங்கேற்போருக்கு ஏற்றுமதி, இறக்குமதி தொழில் தொடங்கும் முறை, விற்பனைக்கு வாய்ப்புள்ள பொருள்கள், விலை நிா்ணயம், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்திய ஆராய்ச்சிக் கழகம், அறிவியல் வேளாண்மை மையம்(மைராடா), 272 பெருமாள் நகா், கலிங்கியம் அஞ்சல், கோபி, ஈரோடு மாவட்டம் எனும் முகவரியில் நேரில் அல்லது 98401-58943, 83443-96930 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.