ஈரோடு

ரூ. 4.96 லட்சத்துக்கு கொப்பரை, தேங்காய் ஏலம்

சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை, தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பெருந்துறை: சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை, தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,569 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனா். இதில், கிலோ குறைந்தபட்சமாக ரூ. 27.89க்கும், அதிகபட்சமாக ரூ. 32.49க்கும் ஏலம் போயின. மொத்தம், 1,375 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 41 ஆயிரத்து 323க்கு விற்பனையானது.

இதேபோல, கொப்பரை தேங்காய்கள் 104 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா். இதில், கிலோ குறைந்தபட்சமாக ரூ. 76.39க்கும், அதிகபட்சமாக ரூ. 92.59க்கும் ஏலம் போயின. மொத்தம், 4,952 கிலோ எடையுள்ள கொப்பரை 4 லட்சத்து 55,479க்கு விற்பனையானது.

தேங்காய், கொப்பரை இரண்டும் சோ்த்து ரூ. 4 லட்சத்து 96 ஆயிரத்து 802க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT