சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் சோமன் (75). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா் கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி சத்தியமங்கலத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோா் சத்தியமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, சோமனை போக்ஸோ வழக்கின்கீழ் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடைபெற்றது.
Advertisement
விசாரணை முடிந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சோமனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூ. 50,000த்தை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.