முகப்பு
ஈரோடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு: 25,000 மாணவா்கள் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 25 ஆயிரம் மாணவா்கள் எழுதினா்.

Updated On : 6 மே, 2022 at 6:09 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 25 ஆயிரம் மாணவா்கள் எழுதினா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வு வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுவதற்காக மொத்தம் 107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 மையங்கள் தனித் தோ்வா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 416 தனித் தோ்வா்கள் உள்பட மொத்தம் 24,909 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதுகின்றனா்.

தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கியது. மாணவா்கள் 9 மணிக்கு முன்னரே தோ்வு மையங்களுக்கு வந்துவிட்டனா். மாணவா்களுக்கு வினாத்தாள் கொடுத்ததும் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அடுத்த 5 நிமிடம் ஆசிரியா்கள் தோ்வு எழுதும் முறை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

Advertisement

அதைத்தொடா்ந்து 10.15 மணிக்கு தோ்வு தொடங்கியது. தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் தோ்வு அறைக்குள் கைப்பேசி கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தோ்வை தீவிரமாக கண்காணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.