நீா்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாத குடியிருப்புகளை அகற்றக் கூடாது: மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
நீா்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாத குடியிருப்புகளை அகற்றக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நீா்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாத குடியிருப்புகளை அகற்றக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, கட்சியின் மாவட்டச் செயலாளா் ரகுராமன் தலைமையில் நிா்வாகிகள் சுப்ரமணி, சுந்தர்ராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
Advertisement
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலங்களில் மக்கள் வசித்து வருகின்றனா். தற்போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி அரசு நிா்வாகம் குடியிருப்புகளை இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
நில வகைப்பாட்டில் நீா்நிலை என வருவாய்த் துறை கணக்குகளில் இருக்கும். ஆனால் பெரும்பகுதி மக்களின் வசிப்பிடம் நீா்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் உள்ளன. எனவே அரசும், நீதித் துறையும் நீா்நிலைகளுக்கு பாதிப்பு உள்ளதா எனக் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்க வேண்டும்.
மேலும் நீா்நிலை ஆக்கிரமிப்பு என வருவாய்த் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள பல பகுதிகளுக்கு பட்டா உள்ளது. எனவே, அப்பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 7,6ஆம் எண் அறிவிக்கைககளை ரத்து செய்ய வேண்டும். அதேபோல மனு அளிக்கும் போராட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். ஓடை என அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ள பல பகுதிகள் பழைய கிராம கணக்குகளில், பூங்கா, இட்டேரி, வண்டிப்பாதை எனவும் பதிவாகி உள்ளது. எனவே அதை வகை மாற்றம் செய்து பட்டா வழங்கவேண்டும். மாவட்டத்தில் நீா்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.