முகப்பு
ஈரோடு

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்: 70,361 மனுக்களுக்கு தீா்வு

ஈரோடு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் பெறப்பட்ட 70,361 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

Updated On : 14 மே, 2022 at 1:52 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM

ஈரோடு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் பெறப்பட்ட 70,361 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

தோ்தலுக்கு முன் பிரசாரப் பயணமாக ஈரோடு மாவட்டத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற திட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற்றாா். இம்மனுக்கள் மீதுதான் முதல்வரான 100 நாள்களில் நடவடிக்கை எ

டுப்பதாக உறுதியளித்தாா். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 77,343 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து அந்த துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட அளவில் பெறப்பட்ட 77,343 மனுக்களில் 70,361 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. 2,142 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

150 பேருக்கு ரூ.4.50 கோடி மதிப்பில் கல்விக் கடனுதவியும், 90 பேருக்கு சுயத் தொழில் துவங்க ரூ.78 லட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 240 பேருக்கு ரூ.5.28 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.