ஈரோடு

ஈரோடு மாநகராட்சி மருத்துவமனையில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

DIN

ஈரோடு மாநகராட்சி மருத்துவமனையில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் தீ விபத்து தடுப்பது தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ஈரோடு தீயணைப்புத் துறையினா், தீத்தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துராமசாமி தலைமை வகித்தாா்.

இதில் மருத்துவமனையில் மின் கசிவு உள்ளதா? அனைத்து மின் சாதனப் பொருள்களும் முறையாக இயங்குகிறதா? என சோதனை செய்வது அவசியம் எனவும், ஒரே மின் பிளக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் சாதனப் பொருள்களை உபயோகப்படுத்தக் கூடாது எனவும், தீ அல்லது புகை ஏற்பட்டால் உடனடியாக செய்யக் கூடிய பணிகள், நோயாளிகளை அப்புறப்படுத்தும் விதம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்தும் விதம் குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலா்கள், மாநகராட்சித் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT