ஈரோடு

ஈரோட்டில் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவர்

DIN

ஈரோடு: ஒரு மணி நேரம் பத்து நிமிடம், சுருள்வாள் மற்றும் ஒற்றைக்கம்பு சிலம்பம் தொடர்ந்து சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் ஈரோடு மாணவர் எஸ்.செங்கதிர்வேலன் இடம்பிடித்து சாதனைப்படைத்தார்.

புத்தாஸ் சிலம்பம்பாட்ட டிரஸ்ட் மற்றும் ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகமும்  இணைந்து நடத்திய நோபல் உலக சாதனை நிகழ்ச்சி, மாமரத்துபாளையம் சக்தி மசாலா நிறுவன அரங்கில் நடந்தது. இதில், மாணவர் எஸ்.செங்கதிர்வேலன் (வயது9) கலந்து கொண்டு, சுருள்வாள் மற்றும் ஒற்றைக்கம்பு சிலம்பம்
ஆகியவற்றில் ஒரு மணி நேரம் பத்து நிமிடம் தொடர்ந்து சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சி சக்தி மசாலா நிறுவனர்கள் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நோபல் உலக சாதனை தலைமை இயக்க அதிகாரி கே.கே.வினோத், தமிழ்நாடு நடுவர் எம்.கே.பரத்குமார் ஆகியோர் உலக சாதனைப்படைத்த மாணவர் எஸ்.செங்கதிர்வேலனுக்கு,  விருது மற்றும் அங்கீகார சான்று வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில்  மாணவர் பெற்றோர் டி.செந்தில்குமார், தீபா செந்தில் குமார், தலைமை பயிற்சியாளரும், ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் ஆர். கந்தவேல் மற்றும் துணை பயிற்சியாளர் ஏ.மணி, எம்.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT