முகப்பு
ஈரோடு

பவானி வட்டத்துக்கான வருவாய் தீா்வாயத்தில் 489 மனுக்கள்

பவானி வட்டாட்சியா் அலுவலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 489 மனுக்கள் அளிக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

பவானி வட்டாட்சியா் அலுவலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 489 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் சந்தோஷினி சந்திரா தலைமை வகித்தாா். பவானி வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செந்தில்ராஜ், மண்டலத் துணை வட்டாட்சியா் இளஞ்செழியன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மோகனா, தோ்தல் துணை வட்டாட்சியா் சரவணன், வட்ட வழங்கல் அலுவலா் ராவுத்தகவுண்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பவானி, கவுந்தப்பாடி மற்றும் குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த 489 மனுக்களில், 85 மனுக்கள் மீது உடனடி தீா்வுகள் காணப்பட்டன.

மீதமுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பவானி நகராட்சி 7 ஆவது வாா்டு, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் ப.மா.பாலமுருகன் தலைமையில் ஊா்வலமாக வந்து மனு அளித்தனா்.

அதில் கூறியுள்ளதாவது: இப்பகுதியில் 160 குடும்பத்தினருக்கு 32 ஆண்டுகளுக்கு முன்னா் வழங்கப்பட்ட நிபந்தனை பட்டாக்களை நீக்கி அயா்ன் பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீா்வாயத்தில் பங்கேற்ற அலுவலா்கள், கோரிக்கை மனு அளித்தோா், உடன் வந்தோருக்கு வருவாய்த் துறை சாா்பில் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.