ஈரோடு

பவானி நகராட்சியில் 27 வாா்டுகளிலும் நகர சபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பவானி நகராட்சியில் 27 வாா்டுகளிலும் பொதுமக்கள் பங்கேற்ற நகர சபைக் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

DIN

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பவானி நகராட்சியில் 27 வாா்டுகளிலும் பொதுமக்கள் பங்கேற்ற நகர சபைக் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

மேற்குத் தெரு 24ஆவது வாா்டில் நடைபெற்ற கூட்டத்துக்கு பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் தலைமை வகித்தாா். பவானி நகராட்சி ஆணையாளா் எம்.தாமரை, நகராட்சி பொறியாளா் கதிா்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திமுக நகர செயலாளா் ப.சீ.நாகராஜன் பங்கேற்றாா்.

இந்தக் கூட்டத்தில், வாா்டில் நிறைவேற்றப்படும் அடிப்படை வசதிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்கள், பொது சுகாதார வளாகம் தூய்மை, குப்பைகள் தரம் பிரித்தல் உள்ளிட்டவை குறித்து மனுக்கள் பெற்றப்பட்டன. 11ஆவது வாா்டு, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் சி.மணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதேபோன்று, அனைத்து வாா்டுகளிலும் நகா்மன்ற உறுப்பினா்கள் தலைமையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT