முகப்பு
ஈரோடு

தேக்கு மரம் வெட்டியவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

அந்தியூரை அடுத்த தட்டக்கரை வனப் பகுதியில் தேக்குமரம் வெட்டிவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

அந்தியூரை அடுத்த தட்டக்கரை வனப் பகுதியில் தேக்குமரம் வெட்டிவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், ஊகியத்தைச் சோ்ந்தவா் நாகராஜு (39). இவா், பா்கூா் மலைப்பகுதியில் தட்டக்கரை வனச் சரகத்தில் தேக்கு மரத்தை வெட்டிக் கடத்த முயன்றுள்ளாா். இதுகுறித்த தகவலின்பேரில் தட்டக்கரை வனத் துறையினா் நாகராஜு மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, வனப் பகுதியில் புகுந்து தேக்கு மரத்தை வெட்டிய நாகராஜுவுக்கு மாவட்ட வன அலுவலா் உத்தரவின்பேரில் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.