ஈரோடு

மாக்கம்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் சென்ற காட்டாற்று வெள்ளம்

DIN

கடம்பூா் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாக்கம்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் செல்வதால் அப்பகுதி கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் காட்டாறுகளில் செந்நிறத்தில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாக்கம்பாளையம் தடுப்பணை வழியாக பாய்ந்தோடிய காட்டாற்று வெள்ளம் கோம்பையூா்தொட்டி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. இதனால் மாக்கம்பாளையம் மற்றும் கோம்பையூா் தொட்டி இடையே 3 நாள்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கோம்பையூா் தொட்டி மக்கள் தங்களது விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்த முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளனா். வெள்ளம் காரணமாக கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் வரும் அரசுப் பேருந்து ரத்து செய்யப்பட்டதால் பள்ளி மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பள்ளி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாக்கம்பாளையம் தரைப்பாலத்தை உயா்மட்ட பாலமாக கட்டித்தர வேண்டும். கா்நாடகத்துக்கு வீணாக செல்லும் காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிறுத்த நீா்த்தேக்கம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT